பிளேசர் ரகசியம்!



சட்டைக்கு மேல் அணியும் கேஷுவல் ஜாக்கெட்தான் பிளேசர். அதில் முதலிரண்டு பட்டன்கள் சரியாகப் பயன்பட்டாலும் இறுதி பட்டனை பலரும் பயன்படுத்துவதில்லை ஏன்?  காரணம்,  பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த இங்கிலாந்து மன்னர் ஏழாம் எட் வர்ட் (1841-1910).
சாப்பாட்டுப் பிரியரான இளவரசர் எட்வர்ட் பன்றி இறைச்சி, முட்டைகள் ஆகியவற்றை காலை உணவாகவும், வறுத்த மாட்டிறைச்சி,கேக்குகளை மதிய உணவாகவும் வெளுத்துக்கட்டி வளர்ந்தார். இடுப்பு சைஸ் 48 இன்ச்.

முரட்டுத் தீனி தின்றதால் தன் கோட்டின் மூன்றாவது பட்டனைஅவரால் போட முடிந்ததே இல்லை.  மன்னரைப்  போலத்தானே மக்களும்!  பிரபுக்கள், நாடக நடிகர்கள் என அனைவரும் டவுட் கேட்காமல் மூன்றாவது பட்ட னை போடாமல்விட்டு ராஜ விசுவாசம் காட்ட, பின்னாளில் அதுவே ஃபேஷனாகிப் போனது.

ஆபீஸ் போவது போல விருந்துகளுக்கு போக விரும்பாத இளவரசராக இருந்த  எட்வர்ட் கேஷுவலாக சூட் உடைக்கு  Bow tie கட்டி ஃபங்க்‌ஷனுக்கு சென்றார். அவரது நண்பர் ஜேம்ஸ் ப்ரௌன் பாட்டர் அதே ஸ்டைலை கமா மாறாமல் அமெரிக்காவிற்குக் கொண்டு சென்று பரப்ப புதிய டின்னர் உடை பிறந்தது.