புக் பாய்ன்ட்!




LUCY CASTOR FINDS HER
SPARKLE 
by Natasha Lowe 
240pp,Simon & Schuster 

லூசி காஸ்டர் அதிக மாற்றங்களை விரும்புபவள் அல்ல. ஆனால் விரைவில் நான்காம் வகுப்பு செல்லவிருக்கிறாள். என்ன மாற்றங்களை சந்திக்
கிறாள் என்பதே கதை. லூசியின் தாய்க்கு பிறக்கவிருக்கும் ட்வின் சகோதரர்கள், பக்கத்து வீட்டுத்தோழியின் பற்பல நிறங்களைக் கொண்ட முடி என குழப்பமான சூழல்கள் சிறுமி லூசியை தடுமாற்றமடைய வைக்கின்றன. லூசி எப்படி தன் கோபத்தையும் பதற்றத்தையும் கட்டுப்படுத்த கற்கிறாள் என்பதை ஆசிரியர் இனிய மொழியில் விவரிக்கிறார்.
 
FLORETTE 
by Anna Walker ; illustrated by
Anna Walker 
40pp, Clarion 

மே தன் நகரம் நோக்கி இடம்பெயர்ந்தபின் தான் வளர்த்த தோட்டத்தை  நிரந்தரமாகப் பிரிந்துவிட்டதாக  ஏக்கம் கொள்கிறாள். வண்ணத்துப்பூச்சிகள், பறவைகளை அட்டைப் பெட்டி களில் வைப்பதையும் மழை  அடித்துக்கொண்டு போக, மீதியை மேயின் தந்தை குப்பை என கூட்டித்தள்ள நொந்து போகும் மே, இறுதியாக தன் பிரிய தாவரங்களை வளர்க்க என்ன செய்தாள் என்பதை  அழகிய  படங்களுடன் விளக்கும் நூல் இது.