‘‘உண்மை பேசியதற்கு அரசு தரும் தண்டனை இது!”



முத்தாரம் நேர்காணல்

நேர்காணல்:
பிர்ஜித் ஸ்வார்ஷ்,
மூத்த பத்திரிகையாளர்.


வட ஆப்பிரிக்காவிலுள்ள மேற்கு சகாரா மற்றும் செனகல் ஆகியவற்றுக்கு இடையிலுள்ள மாரிடானியா, உலகிலேயே கடைசியாக(1981) அடிமை முறையை ஒழித்த நாடு. 2007 ஆம் ஆண்டு அடிமை முறையை குற்றமென அறிவித்தது.

அராபியர்கள், பெய்டர்கள், வடகிழக்கு பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த பெர்பர்கள், ஆப்பிரிக்க அடிமைகள் இங்கு வசிக்கின்றனர்.  ஆப்பிரிக்க மாரிடானிய மக்களுக்கு எதிராக அரசு  கட்டவிழ்த்த வன்முறை உள்ளிட்ட  பிரச்னைகளை மூத்த  பத்திரிகையாளரான பிர்ஜித் ஸ்வார்ஷ் பேசுகிறார்.

மாரிடானியாவில் இன்னும் அடிமை முறை ஒழிக்கப்பட வில்லையா?  இதற்கு ஆதாரம்  ஏதேனும் உண்டா?

அரசு தவிர்த்த பிற இயக்கங்கள் அடிமை முறைக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. அரசின் பங்கு இதில் மிக சொற்பம். அடிமை முறையால் பாதிக்கப் படும் ஹராடைன் இன மக்கள் கடும் வறுமையில் வதங்குகிறார்கள். வசதியான குடும்பங்களின் ஆடு மற்றும் ஒட்டகங்களை மேய்ப்பதே இவர்களின் பணி.

இன்றும் கிராமங்களில் இம்மக்களை ஏலங்களில் வாங்கி விற்கிறார்கள். அடிமைகளை விடுவிக்க பாடுபடும் தனியார் அமைப்புகளை அரசு பதிவு செய்ய மறுக்கிறது. இதன் விளைவாக, அயல்நாட்டு நிதி  கிடைக்காது.  பேரணி, மாநாடு என எதையும் நடத்த அனுமதி இல்லை. அரசின் டிவி, ரேடியோ எதையும் பயன்படுத்த முடியாது. வாட்ஸ்அப் போன்ற சேவை களைத்தான் சார்ந்து  இந்த அமைப்புகள் இயங்குகின்றன.

மாரிடானியாவில் தீர்க்கப்படாத பிரச்னைகள் என்ன?

அடிமை முறையை  அடுத்து தீண்டாமை,  அதைத்  சார்ந்த  குற்றச்செயல்கள். 1989-91 ஆண்டு களில் ஆப்பிரிக்க-மாரிடானியர்களுக்கு எதிராக  அரசு  தொடங்கிய கலவரத்தில் அதிகாரிகள்  மற்றும் பொது மக்கள் என ஆயிரக்கணக்கான வர்களை அநீதியாக குற்றம் சாட்டி   தூக்கி  லிட்டது. 

அரசின் வன்முறையால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் செனகலுக்கு  இடம் பெயர்ந்து விட்டனர். இன்றும்  இறந்தவர்களின் குடும்பம் நீதிகேட்டு  நிற்கிறது. ஆண்டுதோறும் 28 ஆம் தேதி இதற்காக போராட்டம் நடைபெற்று வருவதை மனித உரிமை கண்காணிப்பகம் பதிவு செய்துள்ளது.

அரசு அடக்குமுறைக்கு  உதாரணம் சொல்லுங்களேன்.மூர் இனத்தைச்  சேர்ந்த ஓமர் பெய்பாகர், ஆப்பிரிக்க மாரிடானிய மக்கள் 1989-91 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டபோது பலரும் அறிந்த அரசு அதிகாரி.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிகழ்வை படுகொலை என்று கூறி பேசினார். உடனே அரசு இவரை கட்டம் கட்டி பாஸ்போர்ட்டை தடை செய்து, தீவிரவாதி என  முத்திரை குத்தி என்கொயரி செய்து வருகிறது. உண்மையை பேசியதற்கு அரசு தரும் தண்டனை இது.
 
சவால்களை மீறி மனித உரிமை மீறல்களைப் பற்றிய ஆய்வறிக்கையை எப்படி தயாரித்தீர்கள்?

கடந்த செப்டம்பர் மாதம் வரை அடிமை எதிர்ப்புக் குழுவினர் மாரிடானியாவுக்குள் நுழைய அரசு அனுமதிக்கவில்லை. இங்கிருந்த ஆய்வாளர்களும் நாட்டைவிட்டு வெளியேற அனுமதி தரவில்லை.

இதோடு ஒப்பிடும்போது  எங்களின் கேள்விகளுக்கு  பதில்களைத்  தர அதிகாரிகள் மறுக்கவில்லை.  அருகிலுள்ள நாடுகளை ஒப்பிடும்போது மாரிடானியா ஏழையான  நாடல்ல. மீன்வளம், எரிவாயு, கனிமங்கள் நிறைந்த  நாடு  இது.  சமநிலையற்ற அரசிய  லால்  சீரழிவில்  சிக்கித்த விக்கிறது.

நன்றி: hrw.org