பிட்ஸ்!




*வெள்ளை மாளிகையில் அனைத்தும்  ஃப்ரீ கிடையாது. சாப்பிடும் உணவிற்கான பில்லை  அதிபர் தன் சம்பளத்திலிருந்து கட்டவேண்டும்.

*அனைத்திலும் பர்ஃபெக்டாக உள்ள அம்மாவின் நண்பரின் மகன் என்பதை கொரிய வார்த்தையில் சொல்ல Umchina என்ற வார்த்தை உதவும்.

*1386 ஆம் ஆண்டு பன்றி ஒன்று பொதுமக்கள் முன்னிலையில்  தூக்கிலிடப்பட்டது. ஏன்? சிறுகுழந்தை ஒன்றை கொன்ற குற்றத்திற்காக.
 
*ஆப்பிளின் தோலை கத்தியால் சீவிவிட்டு தின்றால் அதில் 30% வைட்டமின் சியும், 50% நார்ச்சத்தும் கிடைக்காது.

*தன் உடலுறுப்புகள், மூளை செல்களைக் கூட  திரும்பத் திரும்ப வளர்த்துக் கொள்ளும் மெக்சிகோ சாலமண்டார் இனத்தைச் சேர்ந்த Axolotl  உயிரி,
புற்றுநோய்க்கு  எதிரான ஆற்றல் கொண்டதாகும்.