சொல்வது நிஜம்!



ஒட்டகச்சிவிங்கிகள் தினசரி அரை மணிநேரம் மட்டுமே தூங்கும். தினசரி 4 மணிநேரம் தூங்கும் ஒட்டகச்சிவிங்கியைப் பார்த்து இப்படியொரு கேள்வி! வயதுவந்த  மற்றும்  இளம்  ஒட்டகச்சிவிங்கிகளை 152 நாட்கள் ஆய்வு செய்த ஆராய்ச்சி யாளர்கள் மாலையில் குட்டித்தூக்கம்,  இரவில் குறட்டைவிட்டு  தூக்கம் என ஒட்டச்சிவிங்கியின் தூக்கத்தை வரையறுத்துள்ளனர்.

சிம்பன்சியிலிருந்து  உருவாகி  வந்ததே மனித இனம். மனிதர்களுக்கும் சிம்பன்சிக்குமான டிஎன்ஏ ஒற்றுமை 98.8%. மனிதர்களுக்கும்  சிம்பன்சிகளுக்கும்  ஒரே முன்னோர்கள் (8 மில்லியன் ஆண்டுகள்) இருந்திருக்கலாம். ஆனால் மனிதர்கள் பெற்ற பரிணாம மாற்றங்கள் பல தலைமுறைகளுக்குப் பிறகு ஏற்பட்டது.

விண்வெளியிலுள்ள  நிலவு பூமியின் கடல்நீரை இழுக்கிறது.உண்மை. ஆனால் பூமியின் ஈர்ப்பு  விசையில் நிலவின் பங்கு பத்து மில்லியன் அளவு பலவீனமானது. சூரியன், பூமி, நிலவு என மூன்றும் இழுப்பதை விட விசைகள் ஒன்றையொன்று உந்தித் தள்ளுவதே அதிகம். கடல் அலைகள் உருவாகி வேகம் உயர் வதும் தாழ்வதும் இதன் விளைவாக ஏற்படுகிறது.