ஜோர்ன் லாம்பெர்க்



பசுமை பேச்சாளர்கள்  39

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஜோர்ன் லாம்பெர்க்,  சூழல்  பொருளாதாரத்துறையில் பணியாற்றி வருபவர். கோபன்ஹேகன் வணிகப்பள்ளியின் பேராசிரியர்; டென்மார்க்  அரசின்  EAI  அமைப்பின்  முன்னாள்  இயக்குநர். 2012-2013 ஆம்  ஆண்டு 100 Global Thinkers  லிஸ்டில்  இடம்பெற்ற  சூழலியல் எழுத்தாளர்.

2001 ஆம் ஆண்டு The Skeptical Environmentalist  என்ற சூழலியல்  நூலை  ஜோர்ன் லாம்பெர்க் எழுதி புகழ்பெற்றார். “வெப்பமயமாதலைக் குறைக்க  ஆராய்ச்சி  யாளர்கள் டஜன் கணக்காக சொல்லும் யோசனைகள் அதிக  செலவு பிடிக்கக் கூடியவை. ஆனால்  அதனாலும் உடனடியாக பூமியின் வெப்ப பிரச்னையை தீர்க்கமுடிய வில்லை” என வெடிக்கிறார் லாம்பெர்க். 

ஜார்ஜியா பல்கலையில் அரசியல் அறிவியல் பட்ட தாரியான லாம்பெர்க், 1991 ஆம் ஆண்டு கோபன்ஹேகனில் பிஹெச்.டி பட்டம் பெற்றார். பின்னர் துணைப் பேராசிரியராக பணியாற்றிய லாம்பெர்க், 2005 ஆம் ஆண்டு கோபன்ஹேகன் வணிகப் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தார். அப்போதே  Politiken எனும் பத்திரிகையில் சூழலியல் கட்டுரைகள் எழுதி செலிபிரிட்டியானார்.

பின் பிற பத்திரிகைகளில் ஏறத்ததாழ 400க்கும் மேற்பட்ட உதிரி கட்டுரைகளை எழுதித்  தள்ளினார். The Skeptical Environmentalist (2001),  Cool It: The Skeptical Environmentalist’s Guide to Global Warming. ஆகிய இரு நூல்களும் லாம்பெர்கின் சூழல் ஆர்வத்தை உலகிற்குச் சொன்ன படைப்புகள்.

அரசின் சூழல்துறை  இயக்குநராக பணி கிடைத்தாலும்,  கல்விப்புலத்தின்  சுதந்திரத்திற்காக  அப்பணியை  உதறி ஆசிரியர்  சட்டையை அணிந்து கொண்டவர் லாம்பெர்க். “வெப்பமயமாதல் என்பது உலகம் அழிவதற்கான அறிகுறி அல்ல. இன்றிலிருந்து அதனை சேதப் படுத்தும்  அளவைக் குறைத்துக் கொள்ள முயன்றாலே எதிர் காலத்தில்  நல்விளைவுகளை நாம் பெற முடியும்.

சூழலியல்  குறித்த  கருத்துக்களை யார் கூறியது  என்பதை விட  செயலாக்கும் எளிய வழிகளைக் கண்டுபிடிப்பதே  இன்று  நம் முன்னிருக்கும் தேவை”  என சர்ச்சைகள் சுனாமி யாக  எழுந்தாலும் அத்தனைக்கும்  ஒரே பதிலாகப்  பேசுகிறார் லாம்பெர்க். அறிவியல் தளத்தில் தனது கருத்துக்களுக்கு கடும் கண்டனங்களைப்  பெற்றாலும்,  தனது  செயல்பாட்டில் தரம் தாழாமல்  சூழல் பணிகளை பிரசாரம் செய்து வருகிறார்  ஜோர்ன் லாம்பெர்க்.

ச.அன்பரசு