மூளை சிப்!அமெரிக்காவின் மசாசூசெட்ஸைச் சேர்ந்த ஆராயச்சியாளர்கள் மூளை போன்ற நரம் பிணைப்புகள் கொண்ட சிப் ஒன்றை  உருவாக்கியுள்ளனர். மூளையில் 80 மில்லியன்  நியூரான்களை  நூறு ட்ரில்லியனுக்கும் அதிகமான ஸினாப்ஸ் எனும் ஜங்ஷன் அமைப்பு  இணைத்து உடலின்  சிக்னல்களை கடத்து கின்றன. இதே ஐடியா தான்  கம்ப்யூட்டர்களுக்கும் ஆதாரம்.

“சூப்பர் கம்ப்யூட்டர்களுக்கு மாற்றாக விரல் நக அளவில் சிப்களை உருவாக்குவதே லட்சியம்” என்கிறார் ஆராய்ச்சியாளர்  ஜுவான் கிம்.  தற்போது எம்ஐடி  உருவாக்கியுள்ள மூளை அமைப்பு, சிலிகா, ஜெர்மானியம்  இணைந்து  சினாப்ஸ்  என்ற  ஜங்ஷன் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் பாயும்போது செயல்பாட்டுக்கு வரும் அயனிகள் நியூரான் களுக்கிடையே  பயணிக்கின்றன. இது  கையெழுத்து  மாதிரிகளை 95% துல்லியமாகக் கண்டறிகின்றன. “இந்த அமைப்பில் மின்சாரத்தை செலுத்தினால்  நினைவுகளை  எழுதவும்  அழிக்கவும்  முடியும்” என்
கிறார் கிம்.