பூஞ்சைக்கொல்லி எமன்!



தேனீக்கள் அழிந்து  வருவது  உலகமெங்கும் அலாரமடிக்கும் நியூஸ் என்றாலும், இன்று அதற்கான காரணங்களின் வரிசையில் பூஞ்சைக்கொல்லி இணைந்துள்ளது. அமெரிக்க விவசாயிகள்(AAAS) அமைப்பின் கூட்டத்தில், 2008-2013 காலகட்டத்தில் தேனீக்கள் ஏறத்தாழ 23 சதவிகிதம் அழிந்துள்ளதாக செய்தி  வெளியிடப்பட்டுள்ளது.

மனிதர்களின் விவசாயம், அழகுச்செடிகள் வளர்ப்பு ஆகியவை தேனீக்களின் இடத்தையும், உணவையும் பறிக்க அவை மெல்ல இறந்து வருகின்றன. 30 பில்லியன் விளைபொருட்கள் சந்தையும் அழிந்து வருகிறது என்கிறது 2014 ஆம் ஆண்டு வெளியான பிபிசியின் அறிக்கை.

“நிகோட்டினை மூலமாகக் கொண்ட பூச்சிக்கொல்லிகள் தேனீக்களை பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிப்பது  ஆய்வு உண்மை” என்கிறார் ஆய்வாளரான ஸ்டீவ் மெக்ஆர்ட். பூஞ்சைக்கொல்லி  குறித்த தீர்க்கமான ஆய்வுகளும், தேனீக்கள் குறித்த கரிசனமும்தான் அவற்றை பாதுகாக்க உதவும்.