புத்தகம் பேசுது!




PHYSICIAN
How Science Transformed the
Art of Medicine
by Rajeev Kurapati
Manuscript
Kirkus Indie  

நோயைக் கண்டறிவதில் நவீன மருத்துவம் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறது என்பதைக்கூறும் ஆய்வு நூல். நோயாளியின் நோயை தீர்ப்பதில் உணர்வு மற்றும் ஆன்மிக ரீதியான பங்கை வரலாற்று பின்புலத்துடன் பேசுகிறது. க்ரீஸ், சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் மருத்துவ முறைகளையும், நோய் தீர்ப்பதில் உளவியல் ரீதியான அணுகுமுறைகளையும் நெருக்கமாக ஆராய்ந்து  மருத்துவர் களின் பங்களிப்பை நேர்மையாக புரியவைக்கும் நூல் இது.
  
WHAT ’S HOLDING YOUR SALES BACK?
Find It, Face It & Fix It
by Peter Farkas with Leonard
Atlas
284pp,CreateSpace
Kirkus Indie  

பொருட்களை தயாரிப் பதைவிட அதை முறையாக மார்க்கெட்டிங் செய்து வாடிக்கையாளர் தலையில் கட்டும் சேல்ஸ்  திறமை 21  ஆம்  நூற்றாண்டின் அவசியத்திறன். விற்பனை சீக்ரெட்களின் அடிப்படைகளை விளக்கும் சூப்பர் கைடுதான் இந்நூல். நேரம், கருத்து, எண்ணம், செயல், முன்னுரிமை என குறிப்பிட்ட அடிப்படை கொள்கைகளை உதாரணங்களோடு விளக்குகிறார்கள் ஆசிரியர்களான பீட்டர் மற்றும் அட்லஸ்.