செல் ரோபோ!



மின்சாரத்தை கடத்தும்,  சூழலை பாதிக்காத உருவத்தை மாற்றிக்கொள்ளும்படி மனிதர் களின் செல் சைசில் பொருளை உருவாக்க முடியுமா? இதற்கு கார்னெல் பல்கலையைச் சேர்ந்த இயற்பியலாளர்கள் பால் மெக்யுன் மற்றும் இடாய் கோகன் ஆகியோர் விளக்கம்  தருவதோடு செல்  ரோபோக்களையும் உருவாக்கியுள்ளனர்.  “எலக்ட்ரானிக்ஸில் எக்ஸோகெலிடன் என்று கூறும் விஷயங்களை செய்ய முயற்சிக் கிறோம்.

இது விண்வெளியிலுள்ள வாயேஜர் திறனை சிறிய செல்லில் அடைப்பது போல” என தனது பணிகளை விவரிக்கிறார் ஆராய்ச்சியாளர்  இடாய்  கோகன். இந்த சிறிய செல் ரோபோக்கள் எலக்ட்ரானிக்,   உயிரியல்  மற்றும்  ரோபோ  என   மூன்று விஷயங்கள்  இணைந்த விளைவு.

கிராபீன் மற்றும் கண்ணாடி இணைந்த வாகனம், உடலிலுள்ள வெப்பத்தை மின்சாரமாகப் பெற்று இயங்குகிறது. ரத்த செல்களை விட  பெரிதாகவும்  நியூரான்களை விட சிறியதாகவும் உள்ள இப்புதிய  செல் ரோபோக்களை செமிகண்டக்டர்  தொழில்நுட்பத்தில் பயன்படுத்தும் வாய்ப்புள்ளது.