சூப்பர் ஜவான்!



Rhodesian Ridgeback

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ரிட்ஜ்பேக், பண்ணை விலங்குகளை சிங்கங்களிடமிருந்து காக்கும் வீரம் கொண்டது. டேலன்டும், புத்தியும் சாணை பிடித்த கத்தியாக மிரட்டுவதால், வெளியாட்கள் கவனமாக வீட்டுக்கு வெளியே நிற்பது  உயிருக்கு  கேரண்டி.

அதேநேரம் பயிற்சி அளித்தால் அவை சோஷியலாக பழகும் தன்மையில் அவார்ட் ஜெயிக்கும் அளவு நண்பன்தான். அதேநேரம் கடுப்பேற்றினால், விளைவுக்கு
ஓனரும் பொறுப்பில்லை. 

Bull Terrier

முட்டை ஷேப் தலைதான் இந்த நாயை தனியாகக் காட்டும் அம்சம். ஆக்ரோஷமான நாய் என குறிப்பாக அடையாளம் காட்ட முடியாது. ஆனால் இரையை வேட்டையாடுவதில் புல் டெரியர் காட்டும் வேகம் நெஞ்சில் அனலாய் பீதியூட்டும்.   
 
Tosa Inu 

91 கிலோ எடையில் 81 செ.மீ உயரத்தில் பார்ப்பவர்களை மிரட்டும் டோசா இனு, வளர்க்கப்படுவதே சண்டைக்காகத்தான். இதன் ஆக்ரோஷ போர் குணத்தால் உலகின் பலநாடுகளில் இந்நாயை வளர்க்க சட்ட பூர்வத் தடையே உண்டு.   
  
Dogo Argentino

அர்ஜென்டினாவைச் சேர்ந்த மஸில் ஜவான்தான் டோகோ. டோகோவை டெவலப் செய்ததே புமா, பன்றி ஆகியவற்றை தப்பிக்கவிடாமல் வேட்டையாடத்தான். இதில் வன்முறை குணம் குறைந்த நாய்களும் உண்டு. இங்கிலாந்தில் 1991 ஆம் ஆண்டு சட்டப்படி, டோகோ நாயை வளர்க்க தடை உண்டு.  

The Gull Dong

குல் டாரியர் மற்றும் புல்லி குட்டா எனும் இரு நாய்கள் இணைவில் பிறந்தது இந்த குட்டிப்புலியான குல் டாங். பாகிஸ்தான் புல்டாக் என  புகழப்படும் அதி வலுவான சக்திமான். சண்டை நாயான குல் டாங்குக்கு கோபம் கிளம்பினால், தாறுமாறு தகராறை நிறுத்துவது மிக சிரமம்.

Wolf Hybrid

பெயரே சொல்லிவிட்டதே! நாய்க்கும், ஓநாய்க்குமான இணைவில் பிறந்த நாய் இனம். எனவே இரு இனத்துக்குமான 50-50 குணங்கள் இந்த நாய்க்கு உண்டு. ஹைபிரிட் மரபணு விலுள்ள பழக்கவழக்கங்களை வளர்த்தால் மட்டுமே அறியலாம்

Caucasian Ovcharka

பயத்தை அறியாத இந்த நாய் இனம், பண்ணை விலங்குகளைக் காக்க  உருவாக்கப்பட்டது. சரியானபடி பயிற்சியளித்து வீட்டுக்கு வரும் நண்பர்களை அறிமுகப்படுத்தாவிட்டால், உங்களைத் தவிர வீட்டுக்குள் யாரும் செல்லமுடியாதபடி காவல் காக்கும் ஆக்ரோஷ காவலன் ஆவ்சர்கா.