வலியற்ற வாழ்வுஎலும்புகள் முறிந்தால், நெருப்பு பட்டால் உடல், மனம், ஆவி என சகலமும் பதறி அலறி ஊரைக்கூட்டுவோம். ஆனால் இத்தாலியைச் சேர்ந்த மார்ஷிலி குடும்பத்திற்கு வலி என்ற உணர்வே இல்லை. ஏன்? மரபணு ரீதியான குறைபாடுதான் காரணம்.  லெட்ஷியா மார்ஷிலி  உள்ளிட்ட குடும்பத்தில்  ஐந்து  உறுப்பினர்களுக்கும்  ஏற்பட்டுள்ள குறைபாட்டின்   பெயர் congenital analgesia. “நாங்கள் சாதாரண மனிதர்கள்தான்.

என்ன, பிறருக்கு ஏற்படும் வலிமிகச்சில நொடிகளே இருப்பதால்,  உடல்நிலை  அடிக்கடி பாதிக்கப்படும் பிரச்னை இல்லை” என்கிறார் லெட்ஷியா.

 உலகிலேயே  வலியற்ற  குறைபாடு கொண்டுள்ள முதல் ஃபேமிலி  இதுவே என்பதால் மார்ஷிலி  சிண்ட்ரோம்  என அம்மணி பெயரையே இதற்கு சூட்டி விட்டார்கள்.  ZFHX2   எனும்  மரபணுவில்   ஏற்பட்ட  மாற்ற மே  வலியற்ற  தன்மைக்குக் காரணம்  என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.