எலக்ட்ரிக் சீனா!சீனாவின் சென்ஷென் நகரில் மட்டும் பதினாயிரம் பஸ்கள் ஓடுகின்றன. இது வட அமெரிக்காவின் நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்டி, நியூஜெர்சி,டொரன்டோ ஆகிய நகரங்களின் பஸ் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் மிக  அதிகம்.

சீனாவின் அரசு அதிகாரிகள் ஆறு ஆண்டுகள் உழைத்து டீசல் பஸ்களை முற்றாக  நிறுத்தி தற்போது எலக்ட்ரிக் பஸ்களை மட்டுமே  கொண்ட நகரமாக சென்ஷென் நகரை  மாற்றியுள்ளனர். இது  சீனாவில்  அதிகரித்து வரும்  காற்று மாசுபாடுக்கும் தீர்வாக அமையலாம்.

 3,600 (2015), 9,000 (2016) என  அதிகரித்த  எலக்ட்ரிக் பஸ்களின் எண்ணிக்கை இன்று 14 ஆயிரத்து  500 ஆக உயர்ந்துள்ளது. இந்நட வடிக்கை மூலம் கார்பன் 48%, மீத்தேன் 100%  என   குறைய  வாய்ப்புள்ளது. 2020 ஆம்  ஆண்டுக்குள் டாக்சிகளை  எலக்ட்ரிக்மயமாக்கவும் பிளான் ரெடி.