சைலன்ஸ் ப்ளீஸ்!பெட்ரோல், டீசல்  வாகனங்களை விட ஹைபிரிட்  மற்றும்  எலக்ட்ரிக் வாகனங்கள் ஒப்பீட்டளவில் குறைந்த ஒலியை ஏற்படுத்துகின்றன.  அதிகளவில்  எலக்ட்ரிக் வாகனங்கள் சாலையில் பாயும்போது அதன் டயர்களின் உராய்வு ஒலி அதிகரிப்பது நிஜம்.

சாலையருகே  உள்ள அலுவலகங்கள்  ஒலியைக்  குறைக்க  தடிமனான கண்ணாடிகள், அகவுஸ்டிக் சீலிங் டைல்ஸ்களை ஒலியைத்  தடுக்கும்படி அமைத்து வருகிறார்கள்.

அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள ஒலிக்கட்டுப்பாட்டு விதிப்படி, கட்டுமானத்தில் ஒலி மாசைக் குறைக்கும் பொருட்கள்  பற்றியும்  பரிந்துரை உள்ளது. ‘‘மாணவர்களுக்கு ஒலியின் அழகையும், இரைச்சலின் ஆபத்தையும் விளக்குவது நம் கடமை” என்கிறார் ஆராய்ச்சியாளர்  ப்ரோன்ஸாஃப்ட்.

தற்போது  அங்கு கார்களிலும் ஆக்டிவ் நாய்ஸ் கன்ட்ரோல்(ANC) வசதியை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். “மக்களின் ஆரோக்கியம்  மற்றும் மாணவர்களின் கல்வியைக் காக்க நாம் செய்யவேண்டிய பணி இது. பின்னாளில் ஒலிமாசு கட்டுப்பாட்டு கருவிகள் விலை குறையும் வாய்ப்புள்ளது”  என்கிறார் ப்ரோன்ஸாஃப்ட்.