எலும்புகளை காப்பாற்றாத வைட்டமின்கள்!



வயதானவர்கள் வைட்டமின் டி, கால்சியம் மாத்திரைகளை சாப்பிட்டால் எலும்பு முறிவிலிருந்து விடுதலை பெறலாம் என்ற நம்பிக்கை  மருத்துவ  வட்டாரங்களில் நிலவுகிறது.  அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன்  நடத்திய  ஆய்வில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளை ஆராய்ந்தனர்.

இதில் அவர்களின் சராசரி வயது 50. இடுப்பெலும்பு முறிவு அல்லது மூட்டு முறிவு ஆகிய பிரச்னைகளில் வைட்டமின் டி, கால்சியம்  ஆகியவை  சிறப்பான பலன் தருகின்றன  என்பதற்கு  எந்த  ஆதாரமும் இல்லை  எனத்  தெரிய  வந்துள்ளது.

ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் வைட்டமின் டி குறைபாடுகள் இல்லாதவர்களுக்கு வைட்டமின் டி உள்ளிட்ட மாத்திரைகள் பயன் தருவதில்லை என பிரிவென்டிவ்  சர்வீஸ் டாஸ்க் ஃபோர்ஸ் அமைப்பு 2013 ஆம் ஆண்டிலிருந்தே கேள்விகளை எழுப்பி வருகிறது.

வைட்டமின் டி என்பது சூரிய ஒளியால் நம் உடல் தயாரிக்கும் சத்து. “சரியான உணவுப்பழக்கத்தின்மூலம் உடலின் ஆரோக்கியம் காக்கலாம். எனவே வைட்டமின் டி, கால்சியம் ஆகிய  மாத்திரைகளை  சாப்பிடுவதற்கு  முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம்”  என்கிறார் நுண்ணூட்டச்சத்து வல்லுநரான மரியான் நெஸ்லே.