ஆப்பிரிக்க அமெரிக்க கண்டுபிடிப்பாளர்கள்!THOMAS L. JENNINGS (1791-1859)அமெரிக்காவில் பிறந்த தாமஸ் எல் ஜென்னிங்ஸ், ஆப்பிரிக்க அமெரிக்கர்களில் தன் கண்டுபிடிப்புக்காக முதன்முதலில் காப்புரிமை பெற்றவர். நியூயார்க்கில் டெய்லராகவும், ட்ரை க்ளீனராகவும் பணியாற்றியவர், “dry scouring”  எனும்  தனது  புதிய  முறைக்காக 1851 ஆம்  ஆண்டு  பேடன்ட் பெற்றார்.

பாரீசைச் சேர்ந்த  டெய் லரான ஜீன் பாப்டிஸ்டே வெளுக்கும் முறையை கண்டறிவதற்கு  நான்கு  ஆண்டுகளுக்கு முன்பே தாமஸ் செய்த சாதனை இது. எதிர்ப்புகள்  கிளம்பினாலும் பேடன்ட் மூலம் கிடைத்த பணத்தை அடிமை முறையை எதிர்க்கவும் குடும்பத்தை வறுமையிலிருந்து மீட்கவும் செல வழித்தார்.

MARK E. DEAN

ஐபிஎம் கம்ப்யூட்டரை பயன் படுத்தி இருந்தால் நீங்கள் மார்க் இ. டீன் என்பவருக்கு நிச்சயம் தேங்க்ஸ் சொல்ல வேண்டும். 1957 ஆம் ஆண்டு பிறந்த மார்க்,  கம்ப்யூட்டர் எஞ்சினியர்.

ஐபிஎம்மில் பணியாற்றிய மார்க்கின் டீம், பிரிண்டர், மோடம், கீபோர்ட் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கான ISA Bus வன்பொருளை வடிவமைத்தது. இதன் பின்தான் கம்ப்யூட்டர் ஆபீஸில் பயன்பாட்டுக்கு வந்தது. கலர் மானிட்டருக்கான ஆராய்ச்சி யிலும் டீனின் பங்கு உண்டு. அன்று ஜிகாஹெர்ட்ஸ் சிப் உள்ளிட்ட 20  பேடன்டுகளை மார்க் டீன் வைத்திருந்தார். தற்போது டென்னிசி பல்கலையின் பேராசிரியராக  பணிபுரிகிறார் மார்க் டீன்.

Dr. SHIRLEY JACKSON

தற்போது நியூயார்க்கில் பணி புரியும் தியரெட்டிகல் இயற்பியல் ஆராய்ச்சியாளரான ஷிர்லி, ஏடி & டி பெல் ஆய்வகத்தில் பணிபுரிந்தபோது, எளிதில்  கையாளும்  ஃபேக்ஸ், சோலார் செல், ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள், காலர் ஐடி, வெயிட்டிங் ஆகியவை அம்மணியின் அரிய
கண்டுபிடிப்புகள். எம்ஐடியில் பிஹெச்.டி படித்தவரும், அமெரிக்காவின் அணு ஆயுத ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இடம்பெற்ற ஒரே கருப்பினப் பெண்ணும் ஷிர்லிதான்.

CHARLES RICHARD DREW (1904-1950)

அமெரிக்காவிலுள்ள  ரத்த வங்கிகள் உருவாக்கத்தின் பிரம்மா. இரண்டாம் உலகப்போரின்போது நியூயார்க் மருத்துவமனையில் ரத்த பிளாஸ்மாக்களை பெற்று  ஐரோப்பிய நாடுகளுக்கு  அனுப்பி  வீரர்களின் உயிரைக்காப்பாற்ற உதவினார் சார்லஸ். ராணுவத்தின் நிறவெறியால் பணிவிலகிய மருத்துவர் சார்லஸ், பின்னாளில் மருத்துவராகவும் பேராசிரியராகவும் பணிசெய்தார்.