கொசுக்களை ஒழிக்கும் ட்ரோன்!விபத்துக்களால் ஏற்படும் மரணத்தை விட கொசுக்களால் ஏற் படும் தொற்றுநோய் மரணங்கள் அதிகம். மலட்டுத்தன்மை கொண்ட கொசுக்களை  ட்ரோன்  மூலம் பரப்பும் திட்டத்தின் மூலம் கொசுக்களின் உற்பத்தியை தடுக்கும் திட்டம் செயல்படவிருக்கிறது என்கிறார் பிபிசியின் செய்தியாளர் கிறிஸ் ஃபாக்ஸ்.

உலகில் கொசுக்கள் ஆண்டுதோறும் 700 மில்லியன் மக்களை தாக்கி மலேரியா, டெங்கு, ஜிகா உள்ளிட்ட நோய்களை பரப்பு கிறது. கொசுக்களை அழிக்கும் முயற்சி நடக்கும் இடம்  மனிதர் களும்  செல்ல அனுமதி  இல்லாத  பாதுகாக்கப்பட்ட  பகுதி  என் பதால் WHO  இம்முயற்சியை சங்கடத்துடன் கவனிக்கிறது.

வீரோபாடிக்ஸ் நிறுவனம் 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மத்திய அமெரிக்காவில்  ட்ரோன் சோதனையை நடத்தவுள்ளது. “4 -8 டிகிரி செல்சியஸ்  வெப்பநிலையில் ஆண் கொசுக்கள் எடுத்துச் செல்லப்பட விருக்கின்றன. அடிபடாமல் அதேசமயம்  மயக்கநிலையில்  எடுத்துச்செல்லும் கட்டாயம் உள்ளது” என்கிறார் ஸ்பெக்ட்ரம்  நிறுவனத்தின்  ஆராய்ச்சியாளரான கிளாப்டாக்ஸ்.