சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை!சர்க்கரை ஆராய்ச்சிகளுக்கான நிதியுதவியை நிறுவனங்கள் நிறுத்தி  இன்றோடு 50 ஆண்டுகள் ஆகின்றன. இதய நோய்க்கு சர்க்கரை காரணம் என்ற உண்மையே தடைக்கு முக்கிய காரணம். International Sugar Research Foundation (ISRF) அமைப்பு கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் செய்த  ‘ப்ரொஜெக்ட் 259’க்கு முன்னர் நிதியுதவி அளித்தது.

அதிகப்படியாக சர்க்கரை உண்ணுவது இதயநோய், சிறுநீர்ப்பை புற்றுநோய் ஆகியவற்றுக்கு காரணமா? என்பதே ஆராய்ச்சி  டாபிக்.  கூடுதாக  நிதியுதவி ஒதுக்காமலும், ஆராய்ச்சி முடிவை வெளியிடாமலும் ISRF அன்றே நிறுத்தி வைத்துள்ள உண்மை இன்று PLOS Biology இதழில் வெளியாகியுள்ளது. குளிர்பானங்கள், மிட்டாய்கள் உடல் எடை, பருமனை தூண்டவில்லை  என்று  ஆராய்ச்சியாளர்களுக்கு நிதியளித்து அறிக்கை வெளியிடுவது  அங்கு  இயல்பான ஒன்று.

ட்ரைகிளைசரைட்ஸ்   எனும் ரத்தக்  கொழுப்புகளுக்கும்  சர்க்கரைக்கும்  உள்ள  தொடர்பு முக்கியமானது. எலிகளுக்கு மிகையான சர்க்கரை உணவுகளை அளித்தபோது, பீட்டா குளூகுரோனைடைஸ் எனும் என்ஸைம் அவற்றின் சிறுநீரில் தென்பட்டது.  இது  சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கு ஆதாரமானது” என்கிறார் ஆராய்ச்சியாளரும் UCSF பல்மருத்துவமனை பேராசி ரியருமான கிறிஸ்டின் கியர்ன்ஸ்.