அமெரிக்கா அகதிகளின் நாடு என்பதே உண்மை!



நேர்காணல்: ஹென்றி லூயிஸ்

கேட்ஸ் ஜூனியர், எழுத்தாளர்


அமெரிக்காவின் வர்ஜீனியாவில் பிறந்த ஹென்றி லூயிஸ் 100 Amazing Facts About the Negro என்ற நூலை ஆராய்ச்சி செய்து எழுதியுள்ளார். PBS டிவியில் Finding Your Roots என்ற அமெரிக்கர்களின் முன்னோர் களைக் குறித்த நிகழ்ச்சியை நடத்திவரும் அல்போன்ஸ் ஃப்ளெச்சர்  பல்கலையின் பேராசிரியர் இவர்.  உங்களது நூலில் உங்களைக் கவர்ந்த விஷயம் எது? 

ப்ளோரிடாவில் இளமை நீரூற்றை  தேடிச்சென்ற   பொன்ஸ் டி லியோன் படையுடன் ஆப்பிரிக்க  அமெரிக்கரான ஜூவான் காரிடோ  இருந்தார் என்பதே  இந்நூலில் நான் எழுதியுள்ள  எனக்கு பெரும்  அதிர்ச்சியும்  கவர்ச்சியும் எற்படுத்திய உண்மை.
 
நீங்கள் எழுதிய நூலுக்கு 1957 ஆம் ஆண்டு வெளியான இனத்தூய்மையைப் பற்றி விமர்சிக்கும் நூலை இன்ஸ்பிரேஷன் என்று கூறுகிறீர்கள். எப்படி?  

எனக்கு நிறைய திட்டங்கள் உள்ளன. முதலில், நாம் அனை வரும் எங்கிருந்து இடம்பெயர்ந்து வந்தோம் என்பதும். நாம் உறவுகளா? என்பதும்தான். நாம் வரலாற்றின் பின்னோக்கிச் சென்றால், அனைத்து இனக் குழுக்களின்  தோற்றமும்  தொடங்குவது ஆப்பிரிக்காவில்தான். ஆனால் இந்த  உண்மையை சிலர்  ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.
 
மனிதர்கள் அனைவரும்  உறவுகள் என்பதை உறுதியாக எப்படி கூறுகிறீர்கள்? 

உலிசஸ்  நூல்,  டப்ளினிலுள்ள யூத மனிதரின் 24 மணிநேர வாழ்வைப்  பற்றிப்பேசுகிறது. ஆனால்  அதனை மாணவர் குறிப்பாக எழுதும்போது செய்யும்  தவறை  சுட்டிக்காட்டுவது பிழையல்ல. டென்மார்க் இளவரசி பற்றி அறிந்துகொள்ள நாம் ஹாம்லெட் படிக்க அவசியமா என்ன? நாம்  இனக்குழுக்களின் தனித்த கலாசார வரலாற்றை அறிவது மிக அவசியம். குறிப்பாக ஆப்பிரிக்க- அமெரிக்கர்களை.
 
அமெரிக்க கலாசாரத்தில் தனிப்பட்ட அடையாளம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

பரந்து விரிந்த கலாசாரங் களைக் கொண்ட வாழ்வில்  மனிதர்களை சிறிய ஒற்றை அடையாளத்தில் அடைப்பது முட்டாள்தனம். இது 
ஆப்பிரிக்க  அமெரிக்கர்களுக்கும்  அப்படியே பொருந்தும். 

Annotated African American Folktales என்ற நூலை தொகுத்தவர்களில் நீங்களும் ஒருவர். அதில் உண்மைகள் மற்றும் புனைவுகள் அனைத்துக்கும் இடமுண்டு. அது பற்றி கூறுங்கள்? 

பூமியில் நம்மைச் சுற்றி நாம் பார்க்கும் விஷயங்கள் பற்றித்தானே எழுத முடியும். அதனை குறிப்பிட்ட மொழியில் அமைப்பது இரண்டாவது விஷயம்.
 
இன்று நம் சமூகம் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயமாக எதை நினைக்கிறீர்கள்? 
 
அமெரிக்கா என்பது அகதி களின் நாடு என்பது நாம் அறியவேண்டிய  உண்மைகளில் ஒன்று. அந்நாட்டினை உருவாக்கியதில் அகதிகளின் பங்கு மிக அதிகம்.
 
வெள்ளையர்களின் சிலையை அகற்றும் முயற்சி பற்றி உங்கள் கருத்து? 

அகற்றும் சிலைகளை மியூசியத்தில் வைப்பது மாற்று  ஐடியா. சிலைகளை அகற்றுவதன் மூலம் நிறவெறியை அணுவளவும் கூட அகற்றிவிட முடியாது. நாம் தடை பலகைகளை வைப்பதைவிட இணைக்கும் பாலங்களை வைப்பதையே நான் முக்கியமாகவும் அவசியமான செயலாகவும் கருதுகிறேன்.
 
நம்மால் இந்த நிலையை எட்டமுடியும் என்று நம்புகிறீர்களா? 

பல்வேறு வழிகளில் நிச்சயமாக சாதிக்க முடியும். அன்பையும், நீதியையும், ஜனநாயகத்தின் வழியையும் விரும்புபவர்களால் அது நடந்தேறும்.
 

நன்றி: Lily Rothman,Time

தமிழில்: ச.அன்பரசு