புத்தகம் புதுசு!




HELLFIRE BOYS
The Birth of the U.S. Chemical Warfare Service and the Race for the World’s Deadliest Weapons
by Theo Emery
560pp, Rs.973
Little, Brown  

1915 ஆம் ஆண்டு ஜெர்மனி முதலாம்  உலகப்போரில்  நச்சு வாயுத் தாக்குதலை தொடங்கியது. அதன்பின்னர் 1917 ஆம்  ஆண்டில் அமெரிக்கா வேதிப்பொருட் களுக்கான ஸ்பெஷல் பிரிவை உருவாக்கி நச்சுகுண்டுகள், அதிலிருந்து தப்பிக்க  உடைகள் ஆகியவற்றை தயாரித்தது. நச்சு ஆயுதங்களின் தயாரிப்பு, வளர்ச்சி ஆகியவற்றைப்  பற்றி  தியோ எமெரி பல்வேறு தகவல்களை இந்நூலில் விளக்குகிறார்.

THE TELESCOPE IN THE ICE  Inventing a New Astronomy at the South Pole
by Mark Bowen
432pp, Rs.1,247
St. Martin’s Press  

தென்  துருவத்தில்  நியூட்ரினோ தொடர்பான ஆராய்ச்சியில் முனைப்பாக இறங்கியுள்ளவர் களைப்  பற்றிய  எக்ஸ்க்ளூசிவ் செய்திகளை சொல்லும் நூல் இது. தென்   துருவத்தில்  நியூட்ரினோ குறித்து முதல்முறையாக ஆராய்ச்சி செய்ய ஐஸ்க்யூப் ஆய்வகம் கள மிறங்கியதை விவரிப்பதில் நூல்  தொடங் குகிறது.

2010ஆம் ஆண்டு  நியூட்ரினோ முதன்முதலில் கண்டறியப்பட்டு பின்  அதனைக்  கண்டறிவதற்கான டிடெக்டர்  உருவாக்குவது  வரையில் ஆச்சரிய தகவல்களை சிம்பிளாக கூறிச்செல்வது இந்நூலின் பிளஸ் பாய்ன்ட்.