கேட்ஜெட்ஸ் புதுசு!
Travelmate

ஏர்போர்ட்டில் தானாகவே  உங்களைப்  பின்தொடரும்  இன்டலிஜென்ட்  சூட்கேஸ் இது. வெயிட்டிங் ஸ்கேல்,  ஜிபிஎஸ் ட்ராக்கிங், எல்இடி லைட், கைரேகை பாதுகாப்பு என அட்டகாச  அம்சங்கள் கொண்ட சூட்கேஸ் ட்ராவல்மேட் நிறுவனத்தின் ஸ்பெஷல் தயாரிப்பு.விலை ரூ.32,382

Vespa Elettrica scooter

பார் புகழும் வெஸ்பாவின் எலக்ட்ரிக் 50சிசி எலக்ட்ரிக் ஸ்கூட்டர். நான்கு மணிநேரம் சார்ஜ் செய்தால் ஜம்மென 100 கி.மீ செல்ல  முடியும். இதில் ஹைபிரிட் வெஸ்பாவும் உண்டு. 2018 ஆம் ஆண்டு ரிலீஸ்.

LG K7i

பேட்டரி, ப்ரோசஸர் என்பதையெல்லாம் கடந்து டெங்குவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யோசித்த எல்ஜியின் கண்டுபிடிப்பு K7i போன்.  இந்தியாவிற்கென தயாரிக்கப்பட்ட கொசு விரட்டி போன் இது. விலை ரூ. 9,990