பொசிஷன் மாறும் மூளை!



விண்வெளிப்பயணம், வீரர்களின் மூளையில் மாற்றம் ஏற் படுத்துவதை  ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஈர்ப்புவிசையற்ற விண்வெளியில்  அதிக காலம்  தங்கிய  வீரர் களின் மூளையை ஸ்கேன் செய்தபோது, மூளை சிறிது மேல்நோக்கி நகர்ந்திருந்தது. உடலில் இதன் விளைவுகள் தெரியாத போதும், நாசா இம்மாற்றத்தை  சமாளிப்பதற்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளது.

சர்வதேச விண்வெளிமையத்தில் பணியாற்றிய 16  விண்வீரர்களின் உடலை MRI ஸ்கேன் செய்தபோது, மூளையில் ஏற்படும் அழுத்தம் பார்வை மாறுபடுவதற்கு காரணமாக இருக்கலாம் என யூகிக்கின்றனர்.

“நிலவு மற்றும் செவ்வாய் பயணத்தின்போது செயற்கை புவியீர்ப்பு  விசையில் பயிற்சி  தேவை”  என்கிறார் சவுத்  கரோலினா பல் கலையின் ரேடியோலஜிஸ்டான டோனா ராபர்ட்ஸ். பூமியில் உள்ள ஈர்ப்புவிசை விண்வெளியில்  இல்லாததால்  மூளை மேல்நோக்கி நகர வாய்ப்புள்ளது என்கிறார்கள் ஆய்வு வல்லுநர்கள்.