சிம்கார்டுக்கு பயோமெட்ரிக்!



தாய்லாந்தில் மொபைல் பேங்க்கிங்,  எலக்ட்ரானிக்  வழி பண மோசடிகளைத் தவிர்க்க புதியவழியை அரசு கண்டறிந்துள்ளது. முகத்தையும் விரல்களையும் ஸ்கேன் செய்ய ஓகே சொன்னால்தான் இனி தாய்லாந்தில் உங்களுக்கு சிம்கார்டுகள் கிடைக்கும். வங்கதேசம், பாகிஸ்தான், சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் விரைவில் பயோமெட்ரிக் ஸ்கேன் அமலாகவிருக்கிறது.

அண்மையில் 4 லட்சம் தாய்லாந்து சிம்கார்டுகளை சட்ட விரோதமாக வைத்திருந்ததாக 3 சீனர்களை தாய்லாந்து போலீஸ் கைது செய்து, அவர்களிட மிருந்த சிம்களை, கணினி களைக் கைப்பற்றியது நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ஸ்கேன்   சோதனைகளில் சுற்றுலாப்  பயணிகளுக்கும்  விதிவிலக்கு கிடையாது. “பயோமெட்ரிக்,  திட்டம்  மூலம்  மக்களுக்கு பிரைவசியோடு பாதுகாப்பையும் உறுதி செய்கிறோம்” என்கிறார் தாய்லாந்தின்  தொலைபேசி ஆணையத்தின் (NBTC)  செயலாளரான தகோர்ன் தன்டாஷித்.