அமேஸிங் பிட்ஸ்!



* கோடைகாலத்தில் ஈபிள் டவரின் உயரம் 15 செ.மீ அதிகரிக்கிறது.

* பொட்டாசியம், சோடியம், சீசியம், ரப்டியம், லித்தியம் ஆகிய உலோகங்கள் நீருடன் சேரும்போது எலக்ட்ரான் பரிமாற்றத்தால் கடுமையான வெடிப்பொருளாகின்றன.

* மனிதர்களின் வயிற்றில் உருவாகும்  ஹைட்ரோகுளோரிக் அமிலம், பிளேடுகளை அரித்து கரைக்கும் சக்தி கொண்டது. pH அளவு 2-3.

* 1971 ஆம் ஆண்டு ரோமானிய மருத்துவர் Corneliu Giurgea என்பவரால் Nootropics எனும் மூளையின் திறனை மேம்படுத்தும் மருந்துகள் உலகிற்கு அறிமுகமாயின. இன்று இதன் மார்க்கெட் மதிப்பு 2 பில்லியன் டாலர்கள்.

* உலகில் சராசரியாக ஒரு நாளில் பிறக்கும் இரண்டாயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தை அரிதாக வாயில் பற்களுடன் பிறக்கிறது.