கருப்பு வெள்ளை பாண்டா!



பாண்டா கரடிகளின் கருப்பு வெள்ளை நிறம் அவை பனியில் மறையவும், கருப்பு நிறம் தகவல் தொடர்புக்காகவும் உதவுகிறது  என்பதை கலிஃபோர்னியா பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். “பாண்டா கரடிகளைப்போல வேறெந்த பாலூட்டிக்கும் இப்படியொரு நிறம் கிடையாது  என்பது ஆராய்ச்சியாளர்ளுக்கு பெருங்குழப்பம் தந்தது.

தற்போது, பாண்டாக்களின் தோள், கால்களில் உள்ள மறைவான  இடங்கள் பிற உயிரிகளை தொடர்புகொள்ளவும், கண்களைச் சுற்றியுள்ள கருப்பு நிற திட்டுகள் பிற பாண்டாக்களை அடையாளம் காணவுமான பொது அடையாளம்” என்கிறார் ஆராய்ச்சியாளரான டிம் கார்கோ.

பாண்டாக்கள் மூங்கில்களை மட்டுமே உணவாகக் கொள்வதால் உடலில் கொழுப்பு படிவது குறைந்து முழு ஆண்டும் சுறுசுறு எனர்ஜியோடு பல்வேறு  சூழல் களுக்கும் பயணமாகும் அவசியம் ஏற்படுகிறது என்பதும் இந்த ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.