பிளாஸ்டிக் கட்டிடம்!



கான்க்ரீட்டில் கட்டப்படும் கட்டிடங்களை இன்னும் ஸ்ட்ராங்காக்க பிளாஸ்டிக் இருக்கே ப்ரோ! என எம்ஐடி ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கையூட்டியுள்ளனர். இதன்மூலம் கான்க்ரீட்டின் வலிமை 20% கூடும் என்கிறது ஆராய்ச்சித் தகவல். பிளாஸ்டிக்கை ரீசைக்கிள் செய்வதால் 4.5% கார்பன் வெளியீடும் குறையும்  என்பது கூடுதல் பிளஸ்.

“சிமெண்டில் கலக்கப்படும் பிளாஸ்டிக்  அளவு குறித்து கவனித்து வருகிறோம். சரியான முடிவை அறிய சிமெண்ட் மிக்சர் அளவை கச்சிதமாக உருவாக்குவது  அவசியம்” என்கிறார் ஆராய்ச்சிக்குழுவைச் சேர்ந்த  குணால் கப்வாடே பாடீல். ஒளியைப் பிரதி பலிக்கும் தன்மை பிளாஸ்டிக்கில் இருப்பதால் காமா கதிர்வீச்சு அபாயம் பற்றி சர்ச்சை எழுந்தது. “இந்த வகை பிளாஸ்டிக்கில் கதிர்வீச்சு உருவாக பெரிய வாய்ப்பில்லை” என்கிறார் எம்ஐடியின் அணுப் பொறியியல் ஆராய்ச்சியாளர் மைக்கேல் ஷார்ட்.