தொழிற்சாலைகளை மூடிய சீனா!



சீனாவின் காற்று மாசுபாடு உலகறிந்த பிரச்னை என்பதால் உடனடியாக அதை சரிசெய்ய அரசு களமிறங்கியுள்ளது. “தற்போது ஃபேக்டரிகளுக்கு மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் திடீர் இன்ஸ்பெக்ஷன் சென்று தவறுகளுக்கு ஃபைன் விதிக்கிறார்கள். மேலும் சிறைத்தண்டனையும் உண்டு” என்கிறார் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த கேரி ஹூவாங்.

கடந்த ஆண்டு 80 ஆயிரம் தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் விதிகளை மீறியுள்ளதாக சீன அரசு கண்டுபிடித்து தொழிற்சாலைகளை மூடவும் உத்தரவிட்டுள்ளது. “காற்றிலுள்ள மாசுக்களின் அளவு 2035 ஆம் ஆண்டு 35 மைக்ரோகிராம்களாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. மக்களின் எதிர்பார்ப்புக்கேற்ப காற்று மாசுபாடு குறையவில்லை என்றாலும் இதற்கு சிறிதுகாலம் தேவை” என சூழல் அமைச்சர் லி கன்ஜீ கூறியுள்ளார். காற்று மாசு 2016 ஆம் ஆண்டை விட பெய்ஜிங்கில் 10 மைக்ரோகிராம் குறைந்து 60 ஆக உள்ளது. விகிதம் 2.3%.