சூப்பர் கம்ப்யூட்டர் ரெடி!அமெரிக்காவில் அடுத்த சூப்பர் கம்ப்யூட்டர் ரெடி. டென்னிசியிலுள்ள ORNL லேபில், சூப்பர் கம்ப்யூட்டர் சுமித், விரைவில் அறிவியல் கேள்விகளுக்கு பதில் சொல்லும். தற்போதுள்ள செம மைலேஜ் தரும் சூப்பர் கம்ப்யூட்டரின் பெயர் டைட்டன்.“சுமித் கம்ப்யூட்டரில் சில விஷயங்களை இப்போதுதான் ரன் செய்துகொண்டுள்ளோம்” என்கிறார் ஆராய்ச்சியாளரான பிளாண்ட். 2018 ஆம் ஆண்டில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் கம்ப்யூட்டர் இது.

அண்டம் உருவானது முதற்கொண்டு கேட்டு பதில் பெறும் ஆற்றல் கொண்ட கணினி இது. “நட்சத்திர வெடிப்பு, ஏன் - உங்களையும் என்னையும் பற்றிக்கூட அறியலாம்” என்கிறார் பிளாண்ட். இதற்கான ஆய்வுச்சோதனைகள் 2019 ஆம் ஆண்டு தொடங்கலாம் என தகவல் கூறுகின்றது ORNL குழு. தற்போதைய சூப்பர் கம்ப்யூட்டர் சீனாவிலுள்ள சன்வே டைஹூலைட். 125 petaFLOPS திறன் கொண்டது. சாதாரண கணினிகளின் திறன் 63GFLOPS.