டைனோசர் தவளை!ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் பல்கலையில் 68 மில்லியன் ஆண்டுகளுக்கு  முன்பு வாழ்ந்த Beelze bufo எனும் தவளை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். ஏறத்தாழ 4.5 கி.கி எடையும், 4.5 செ.மீ அகலமான முகமும் கொண்ட இந்த தவளையின் உடல் அமைப்பு தற்போது 
ஆய்வாளர்களால்  உருவாக்கப்பட்டு வருகிறது.

“பாக் மேன் கேரக்டர் போல உள்ள தவளையின் கடிக்கும் ஆற்றல் குறித்து அளவிடப்படுவது  இதுவே  முதல்முறை”  என தகவல்  கூறுகிறார் பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான கிறிஸ்டோபர் லப்பின்.

இரையைக் கடித்து தின்னும் சக்தி 30 நியூட்டன் அல்லது 3 கிலோ அளவு என கணிக்கப்பட்டு ஆய்வு சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் வெளியாகியுள்ளது.” இன்றைய புலி அல்லது ஓநாயின் சைசில் உள்ள ராட்சஷ தவளையின் உணவு சிறிய டைனோசர்களாக இருக்க சான்ஸ் அதிகம்” என தகவல் கூறுகிறார் ஆராய்ச்சியாளர் மார்க் ஜோன்ஸ்.