மெக்சிகோ நிலநடுக்க பின்னணி!கடந்த மாதத்தில் மெக்சிகோவை உலுக்கியெடுத்த நில நடுக்கத்திற்கு வட அமெரிக்கா, பசிபிக், கரீபின், கோகோஸ், லிவேரா ஆகிய  நிலத்தட்டுகளுக்கும்  தொடர்புள்ளது. ஆறு ரிக்டர்களையும் தாண்டிய நில நடுக்க ஆபத்து, மெக்சிகோவுக்கு புதிதல்ல. மூன்று நில நடுக்கங்களிலும் பாதிப்பு 804 கி.மீ. தொலைவுக்கு ஏற்பட்டுள்ளது.

மெக்சிகோவின் பைஜி ஜியாபான் (8.1 ரிக்டர்), அடுத்து  பதினொரு நாட்கள் கழித்து அயூட்லா (7.1 ரிக்டர்), இதற் கடுத்து நான்கு நாட்கள் கழித்து மதியாஸ் ரோமெரோ(6.1 ரிக்டர்) என நில நடுக்கம் சீரியலாக நடந்து கட்டிடங்களை நொறுக்கி, 360க்கும் மேற்பட்டோரை உயிர்ப்பலி  வாங்கியது.  காரணம்  என்ன? வட அமெரிக்க நிலத்தட்டின் கீழ் கோகோஸ் நிலத்தட்டு  அழுத்தப்பட்டதால் ஏற்பட்ட விசையால் உருவானதே மேற்சொன்ன முதல் இரண்டு நில நடுக்கங்கள்.

5 முக்கிய நிலத்தட்டுகள் மெக்சிகோ மற்றும் மெக்சிகோ நகர் இருக்கும் பகுதியில் இருக்கும் பொசிஷன்கள்தான் பிரச்னைக்கு  காரணம். அடுத்து,
மெக்சிகோ நகரம் அமைந் திருப்பது பழைய ஏரியின் மேல் என்பது நிலநடுக்க  ஆபத்தை மேலும் எக்கச்சக்கமாக அதிகரிக்கிறது.