கடல்நீரில் மின்சாரம்!கடற்கரையில் மண் அரிப்பைத் தடுக்க கான்க்ரீட்டில் நட்சத்திர டிசைனில் உருவாக்கப்படும் டெட்ராபேட் கற் களைப்போல டர்பைன்களை அமைக்கும் ஐடியாவை பிராக்டிக்கலாக்கும் முயற்சியில் உள்ளனர் ஜப்பானின் ஒகினாவா அறிவியல் தொழில்நுட்ப கழக ஆராய்ச்சியாளர்கள்.

இவற்றின் மூலம் கடல் நீரின் ஆக்ரோஷத்தை தடுப்பதோடு மின்சாரத்தையும்  தயாரிக்க முடியும்  என்பதே பிளஸ் பாய்ண்ட். ஆராய்ச்சியின் வழிகாட்டி, பேராசிரியர்  சுமோரு  ஷின்டாகே.

70 செ.மீ நீளம் கொண்ட  ஐந்து பிளேடு கள் டர்பைன்களில் பொருத்தப்பட்டுள்ளன. டர்பைனோடு மின்சார ஜெனரேட்டர் ஒன்றும் உண்டு. இதில் டால்பின் உள்ளிட்ட கடல் உயிரிகள் பாதிக்கப்படாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன.

“ஜப்பானின் 30% கடற் புறங்களில் டெட்ராபேட் கற்கள்  உள்ளதால்  அங்கு டர்பைன்களை நிறுவி, 10 ஜிகாவாட்  மின்சாரம் தயாரிக்க முடியும். இது பத்து அணுஉலை மின்சாரத்திற்கு  சமம்” என குதூகலிக் கிறார் ஆராய்ச்சித் தலைவர் சுமோரு ஷின்டாகே.

தற்போது 35 செ.மீ அளவில் பிளேடுகளைக்  கொண்ட   மாதிரி டர்பைன்களை  ஜப்பானின்  பல்வேறு கடற்புறங்களில் நிறுவவிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.