அமேசிங் உளவுக் கருவிகள் !
கொலைகாரக் குடை!

பனிப்போர் காலகட்டத்தில் சினிமாவில்  ஜேம்ஸ்பாண்ட்  எதிரிகளைக் கொல்ல  பயன்படுத்தியது  குடை.  யெஸ்.  பட்டனை  அழுத்தினால்  விஷம்  தடவிய  தோட்டா எதிரியின் நெஞ்சில் பாயும். பல்கேரியாவைச் சேர்ந்த கூலிப் படையினரின் ஸ்பெஷல் ஆயுதம் இது.
ரஷ்யர்கள் லிப்ஸ்டிக்கை  துப்பாக்கியாக்கி கிஸ் ஆஃப் டெத் என செல்லப்பெயர் வைத்து கொண்டாடினர்.

ஏஜண்ட் மியாவ்!

சினிமாவையும் கடந்த அமெரிக்கர் களின் அதிரிபுதிரி  ஐடியா, பூனைகள் மூலம் சோவியத்  ரகசியங்களை அறிவது. ஆனால்  கிளிண்டன் அதிபரானதும், சிஐஏவின் ஐடியாவை  நிராகரித்து  பூனைகளைக் காப்பாற்றினார். ஆனாலும் சிஐஏ தொடர்ந்து LSD உள்ளிட்ட மனநிலையை தக்காளிச் சோறாக்கும் போதை வஸ்துகளை டெஸ்ட் செய்து கொண்டே இருக்கின்றனர்.

விஷுவல் மைக்ரோபோன்இருவர் பேசினால் அதை கேமராவில் பதிவு செய்து, கண்கள் மற்றும் உதட்டின் அசைவுக்கு ஏற்ப ஒலியை உருவாக்கும் முயற்சி இது. ஆனால் தியரிக்கு சூப்பர் சொல்லத் தோன்றினாலும், ஆன் தி ஸ்பாட்டில் நிகழ்வை  பதிவாக்குபவரே உரையாடலை பாதிதான் புரிந்துகொள்ள முடியும் என்ற நிலையில் இது எப்படி சாத்தியமாகும்?  கைவிடப்பட்ட  ஆராய்ச்சி இது.