சீக்ரெட் பிளான்



அண்மையில் எலன்மஸ்கினுடைய X37B  விமானம் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது என்ன பிளான் என்று பலருக்கும் மண்டைக்குள் குடைச்சல். போயிங் நிறுவனத்தின் தயாரிப்பான இந்த விமானம், ஆர்பிடல் டெஸ்ட் வெகிள் (OTV) என்று அழைக்கப்படுகிறது. 
ராக்கெட் போல கிளம்பினாலும் திரும்ப பூமிக்கு வந்திறங்கும்போது சாதாரண விமானம் போலவே செயல்படும்.

அமெரிக்க ராணுவத்துடன் ஒப்பந்தம் மூலம் செயல்படும் இதில் 7X4 அளவில சிறியளவில் சரக்கு வைக்கும் இடம் உண்டு. இதற்கு முன்பு 718 நாட்கள் விண்வெளியில் சுற்றிவந்த விண்வெளி விமானம் இது. தற்போது போயிங் தயாரித்துள்ள X-37C வின்கலத்தில் ஆறு விண்வெளி வீரர்கள் பயணிக்க முடியும். 9 மீ. நீளம், 3 மீ. உயரம், 4,989 கி.கி எடையுடையது.

அட்லஸ் ராக்கெட்டை பயன்படுத்த 109 மில்லியன் செலவெனில், ஃபால்கன் 9 ராக்கெட்டை பயன்படுத்த 62 மில்லியன் டாலர்கள் மட்டுமே செலவு. “இது ரீயூஸபிள் ராக்கெட் ஏவுவதற்கான சோதனை முயற்சி” என்கிறது அமெரிக்காவின் பென்டகன் தகவல்.