பாஸ்வேர்டுக்கு பாதுகாப்பு!
முன்னர் பாஸ்வேர்டை திருடி அக்கவுண்டில் பணம் ஏமாற்றும் ஜெகஜ்ஜாலர்கள் அதிகம். இன்று அந்த இடத்திற்கு கணினி ப்ரோகிராம்கள் வந்துவிட்டன. அப்படி யாஹூ, அடோப், லிங்க்டு இன் ஆகிய தளங்கள் தாக்குதலுக்குள்ளான வரலாறு உலகறியும். 12 எழுத்துகளில் பாஸ்வேர்டுகள் தேவை. அதில் பெரிய எழுத்து, சிறிய எழுத்துகள் அமைவது அவசியம். பெரிய எழுத்துக்கள் முதலிலும், சிம்பல்கள் கடைசியிலும் அமையக்கூடாது. 123,abc மற்றும் கீபோர்ட் வரிசை எழுத்துகள், பிறந்ததேதி எண்கள் கூடவே கூடாது. கடினமான பாஸ்வேர்டை உருவாக்கினாலும் அதை நீங்கள் மறக்காமலிருக்க, பாதுகாப்பான இடத்தில் எழுதி வைக்கலாம்.
இருமுறை பாஸ்வேர்டு அத்தென்டிகேஷன் கேட்பது எல்லாம் பழைய டெக்னிக். டெக்னோ திருடர்கள் இதனை ஈஸியாக தாண்டி விடுகிறார்கள். இமெயில் பாதுகாப்பு போதவில்லையெனில் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களின் ப்ரீமியம் சேவைக்கு மாறுவது பாதுகாப்புக்கு கேரண்டி.
|