பிட்ஸ் ஸ்பாட்!




*ஆடுகளால் 360 டிகிரியில் பார்க்க முடியுமா? 320-340 டிகிரி வரை ஆடுகளால் பார்க்கமுடியும். அப்போது மனிதர்களால்? 160-210 டிகிரி என்பது மனிதர்களின் லிமிட்.

*சிவப்பு பாண்டா கரடிகள், வால்ரஸ், ஸ்கங்க் ஆகிய விலங்குகளோடு ஒப்பிடப்பட்டாலும் இவை அவற்றோடு தொடர்பற்ற தனி விலங்கு.

*மண்புழுக்களுக்கு ஒன்றல்ல, இரண்டல்ல, ஐந்து இதயங்கள் உண்டு.

*ஜூவுக்கு செல்லும் சமயத்தில் சளி, இருமல் இருந்தால் கொரில்லா கூண்டுக்கு செல்லாதீர்கள். அவற்றுக்கும் சளி டக்கென தொற்றி
விடும் சான்ஸ் அதிகமாம்.

*அம்மா சென்டிமென்ட் கடல் ஆமைகளுக்கு  இம்மியளவும் கிடையாது. மணலில் குஞ்சு பொறித்தவுடன்  உயிர்பிழைக்க  கடல் நீருக்குள் இறங்குபவை பிறகு, அம்மா மட்டுமல்ல, சகோதரர்களைக் கூட ஆயுளுக்கும் சந்திப்பதேயில்லை.