புக் கார்னர்!



LIFE 3.0
Being Human in the Age of
Artificial Intelligence
by Max Tegmark
336pp, Rs 1,791
Knopf 

நாம்  கண்டுபிடித்த  எந்த டெக்னாலஜியையும் விட AI என்பது சமூகம், போர், குற்றம், வேலை என அத்தனை விஷயங் களிலும் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி எம்ஐடி பேராசிரியரான மேக்ஸ் தெக்மார்க் இந்நூலில் அ முதல் ஃ வரை தெளிவுபடுத்தி அதை எப்படி பிராஃபிட்டாக்கலாம் என  ஐடியாக்களையும்  தூவியுள்ளார்.

ஆட்டோமேஷன் எதிர்காலம் எனில் உங்கள் குழந்தைக்கு என்ன கற்றுக்கொடுப்பது, பிரைவசி காப்பது, வேலை மார்க்கெட்டில் நாம் ஜெயிப்பது எப்படி என நாம் தயங்காமல்  விவாதிக்க வேண்டிய கருத்துக்களை ஆசிரியர் இந்நூலில் பேசியிருப்பதே இதனை முக்கியப்படுத்துகிறது.
 
The Cosmic Machine:
The Science that Runs our
Universe and the Story behind it
by Scott Bembenek
358pp, Rs.1,362
Zoari Press

அணுக்கள், ஆற்றல், க்வாண்டம்  மெக்கானிசம்  ஆகியவையே பால்வெளியின் ஆதாரம். அவை நாம் வாழும் உலகை எப்படி பாதிக்கின்றன, அவற்றின் கண்டு பிடிப்பால் நமக்கு கிடைத்ததென்ன ஆகியவற்றை பேசும் நூல் இது.

இன்றைய உலகில் நாம் கண்டுபிடித்த தொடக்க கால கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்துவதிலிருந்து அறிவியலின் சுவாரசிய கதை தொடங்குகிறது. அறிவியல், வரலாறு, சுயசரிதை என அனைத்தின் காக்டெய்ல் மிக்ஸாக நம்மைச்சுற்றிய உலகைப்பற்றி அறிய சூப்பர் வழிகாட்டி இந்த நூல்.