தானியங்கி காருக்கு புதிய ரூல்ஸ்!



தானியங்கி கார்களுக்கான போக்குவரத்து விதிகளை உலகிலேயே முதல் நாடாக  ஜெர்மனி தயாரித்து அறிவித்துள்ளது. அதாவது, இது தானியங்கி கார்களைத் தயாரித்து இயக்கும் சாஃப்ட்வேர் எஞ்சினியர்களுக்கானது.

முதல்கட்டமாக 15 விதிகளைத் தயாரித்து அதனை மென்பொருள் வல்லுநர்களிடம் கொடுத்துள்ளது ஜெர்மனியின் போக்குவரத்துத் துறை. பாதுகாப்பு, மனிதர்களின் கௌரவம், வாய்ப்புகளுக்கான சுதந்திரம், தகவல்களைக் கையாள்வதற்கான தன்னாட்சி ஆகியவற்றை குறிக்கும் விதிகள் அவை.

டெஸ்லா, பிஎம்டபிள்யூ, பென்ஸ் ஆகிய கார் கம்பெனிகள் தானியங்கி கார்களை தயாரிப்பதற்கான முயற்சியில் இறங்கி விட்டன.  ஆனால்  இவை  டிரைவரின்றி தானாகவே இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.

சரியான வழியில் கார் செல்லும் என்பதற்கு என்ன நிச்சயம்? என சிலர் கேள்வி கேட்டாலும், கம்ப்யூட்டரைப்  பொறுத்தவரை  இது சாதாரண டாஸ்க். எதிர்காலத்தில் கார் டிரைவர்கள்  எண்ணிக்கை  மிக குறைவாகவே இருக்கும் என்பதே தானியங்கி கார்களின் வளர்ச்சி சொல்லும் சேதி.