டைப் செய்ய ஈஸி மொழி எது?சீனமொழிதான். தகவல்களை சிறிய குறியீடுகளில் எளிதாகச் சொல்லிவிடலாம். பிறமொழிகளை விட இம்மொழியை எழுதினால் இடமும் நிறைய மிச்சம். பலரும் கீபோர்டில் எழுதும் இந்தக் காலத்தில் வளவளவென எழுதினால் எப்படி? சீனமொழியின் டைப் டூலான பின்யின் மூலம் சில எழுத்துக்களை டைப் செய்தாலே முழுவார்த்தையும் அமைந்துவிடும்.

எ.கா: சாப்பிட்டு விட்டீர்களா? என்பதற்கு nclm என்ற எழுத்துக்களைத்  தட்டினால் போதும். பியூட்டிஃபுல் என்ற ஆங்கிலச்  சொல்லுக்கு  சீன மொழியில் இரு எழுத்துக்கள் போதும்.

“குறைந்த எழுத்துக்கள் கொண்ட மொழியே,  கணினியில் பயன்படுத்த ஏற்றது. அதற்கான மென் பொருட்களைத் தயாரிப்பதும்  எளிது”  என்கிறார் ரோசெஸ்டர் பல்கலையில் மொழியியல்  துறை  தலைவர் ஸ்டீவன் பியான்டடோஷி.

2011 ஆம் ஆண்டு  ஆய்வாளர் மார்செலோ மாண்டெமுரோ மான்செஸ்டர் பல்கலைக் கழக உதவியுடன் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன்,  ஃபின்னிஷ், டகலாக், சீன மற்றும்  சுமேரிய மொழிகளை ஆராய்ச்சி செய்தார்.

அதில் சுமேரியா, எகிப்து, சீனம் ஆகியவை கணினிக்கு ஈஸிமொழி என கண்டறியப்பட்டன. அதிலும் சுமேரிய, எகிப்து  மொழிகள் டைப்  செய்ய இலகுவான வேகமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.