நூல்வெளி!
How Language Began:
The Story of Humanity’s
Greatest Invention -
by Daniel Everett
PP 352, Rs.1,856
Profile Books Limited  

உலகில் மொழி தோன்றியது எப்போது  என்ற  கேள்விக்கு  பதில் சொல்லும் நூல் இது. மொழியியல், உயிரியல் என பல்வேறு துறைகளிலிருந்து ஆதாரங்களை நேர்த்தியாக நமக்கு  காட்டும் ஆசிரியரின் பணி வியப்பு. முன்னோர்களின் கடல்வாணிப படகுகள் உள்ளிட்டவை பிரமிப்பூட்டுகின்றன. பல்வேறு  நிகழ்வு களினூடே உபகதைகளையும் ஏராளம் நெய்து நூலை சலிப்பின்றி வாசிக்கும்படி உருவாக்கியிருக்கிறார் ஆசிரியர்.
  
Improbable Destinies: Fate,
Chance, and the Future
of Evolution -
by Jonathan B. Losos
PP384 Rs. 1,795
Penguin Publishing Group

பரிணாம வளர்ச்சி பற்றிய தெளிவான உண்மைகளை விரிவாகச் சொல்லும் நூல் இது.பூமியின் தீராத மர்மங்களை ஆராய்ச்சி செய்துவரும் பல்வேறு ஆராய்ச்சியாளர்களிடம்  வாசகர்களை அழைத்துச் சென்று நரி, எலி, பல்லி என பன்மை  உயிரிகளின் பரிணாம வளர்ச்சி யை துல்லியமாக விளக்குகிறார் ஜொனாதன். நம்மையும் நம்மைச் சூழ்ந்துள்ள  உயிரிகளையும் புரிந்துகொள்ள உதவும் நூல் இது.