கண்ணாடிக் கற்களில் மின்சாரம்!வீடுகளின்  கூரையாக  சோலார் பேனல்களை பயன்படுத்தினாலும் விலை, கையாளுவது ஆகியவற்றில் சிக்கல்களுண்டு. தற்போது அதனைத்  தீர்க்க வந்துள்ளது புதிய தொழில்நுட்பம். எக்ஸிடர் பல்கலையைச் சேர்ந்த  ஆராய்ச்சியாளர்கள் BIPV (Building Integrated Photovoltaics) எனும் புதிய தொழில்நுட்பத்தைக்  கண்டறிந்திருக்கிறார்கள்.

டெஸ்லா கார் நிறுவனத்தின் சோலார் பேனல்  போல டைல் ஷேப்பில் உள்ள  இதனை  கட்டுமானத்தில்  பயன்படுத்தலாம். சோலார் ஸ்கொயர் எனும் இந்த கண்ணாடி பேனல் மூலம் மின்சாரத்தை  தயாரிக்க முடியும்.

இந்த  கண்ணாடிக்கற்களின் மூலம் 40% மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம் என்கிறார்கள் எக்ஸிடர் பல்கலை  ஆராய்ச்சியாளர்கள் குழு. சூரிய ஒளியை ஒவ்வொரு கற்களும்  தனித்தனியாக  சேகரிக்கின்றது. ஸ்டார்ட்அப்  நிறுவனமான எக்ஸிடர் விரைவில் இதனை சந்தைப்படுத்தவிருக்கிறது.