ஸ்மார்ட் துப்பாக்கியில் சுடலாமா?



ஜெர்மனி தயாரிப்பான Armatix IP1 துப்பாக்கியும் பிற துப்பாக்கிகளைப்போலத்தான் தோட்டாக்களைப் போட்டால் சுடும். ஆனால் அதற்கு நீங்கள் உங்கள் கையில் வாட்ச் கட்டியிருக்க வேண்டும். யெஸ்! துப்பாக்கி கையில் கிடைத்தால் உடனே யாரும் சுடமுடியாது. அப்படி ஒரு பாதுகாப்பு வசதி இது.

துப்பாக்கி தோட்டாக்களை பிறர்மீது துப்ப அர்மாட்டிக்ஸ் வாட்ச்  சிக்னல் தேவை. துப்பாக்கிக்கும் வாட்ச்சிற்கும் இடையில் ரேடியோ சிக்னல்கள் கனெக்ட்டானால் துப்பாக்கி வெடிக்கும். ஆனால் தற்போது  ஃப்ளோர் என்ற டெக்னாலஜி மனிதர், அர்மாட்டிக்ஸ் வாட்ச்சின் ரேடியோ சிக்னல் அளவை அதிகரித்து, துப்பாக்கியின் சிக்னலை ஜாம்  செய்தாலும்,  துப்பாக்கியின் லாக்கிங் சிஸ்டத்தில் சில காந்தங்களை வைத்தாலும் துப்பாக்கி வெடிக்காது என்பதை டெஃப்கான் மாநாட்டில் ப்ளோர் என்ற தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் செய்து காட்டி ஆச்சரியப்படுத்தினார். இவரது கண்டுபிடிப்பு பற்றி அர்மாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு தெரிவித்தும் அவர்களிடம் ரெஸ்பான்ஸ் இல்லையாம். முகத்தில் ஈயாடலை என்பது இதுதானோ!