ஊழியர்களின் உடம்பில் சிப்!உலகில்  முதல்முறையாக அமெரிக்காவின் 32 எம் என்ற நிறுவனம்,  தனது  பணியாளர்களின் உடலில் RFID சிப்புகளை பொருத்தியுள்ளது.  அரிசி  மணி டிசைனில்  இந்த சிப்  ஊழியர்களின்  விரலில்  பொருத்தப்பட்டுள்ளது. எதற்கு? “கதவு திறக்க, பர்ச்சேஸ்  செய்ய, கம்ப்யூட்டர்களை 
பயன்படுத்த, தம்மைப்  பற்றிய  தகவல்களை  பிறருக்கு கூற, சேமிக்க  ஆகியவற்றுக்கு RFID (Radio frequency Identification) முறைக்கே 
அதிக மவுசு.

அதற்காகத்தான் பொருத்தினோம்  “ என்கிறார் 32எம்  நிறுவனத்தின்  இயக்குநரான டாட்ஸி வெட்ஸ்பை. கிரெடிட், டெபிட் கார்டு போலவே  NFC(near field communication) முறையில் செயல் படுகிறது.

85 ஊழியர்களின் உடலில் அவர்களின் விருப்பத்தின்பேரில்  இந்த சிப் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு சிப்பின் விலை 300 டாலர்களாம்.  ஊழியர்களின் பயத்தை போக்க, நிறுவனத்தின் இயக்குநரும்  அவர் குடும்பத்தினரும் இந்த சிப்பை உடலில்  விரைவில் பொருத்திக்கொள்ளப் போகிறார்களாம். எங்க முதலாளி நல்ல முதலாளி!