நடைவெளி மனிதர்! அமெரிக்காவைச் சேர்ந்த எம்ஜே



எபர்ஹர்ட் தன் 61 வயதில் நடந்த தூரம் மட்டும் 7,081 கி.மீ.  தான் சம்பாதித்த பணத்தை  பெரும்பாலும் இதுபோன்ற நடைப்பயணத்திற்கு  மட்டுமே  செலவு  செய்வது  எபர்ஹர்டின்  வழக்கம். தொற்று நோய்  பாதிப்பு  நடைப்பயணத்தை  தடுக்கக்கூடாது  என்பதற்காக  தன் கால்விரல்  நகங்களைக் கூட  நீக்கிவிட்டு கவலைப்படாமல் நடைபோடும் நடைவெளி மனிதர்  இவர். ஸ்டவ் உட்பட இவர் வைத்திருக்கும் பையின் எடையே 4 கி.கி.தான்.

கடந்த 15 ஆண்டுகளில்  எபர்ஹர்ட்  நடந்தே   கடந்த தூரம் மட்டும் 54 ஆயிரத்து 718 கி.மீ. 2013  ஆம்  ஆண்டு மட்டும் 11   தேசிய  முக்கியத்துவம்   வாய்ந்த  இடங்களுக்கும்  (பல நூறு கி.மீ!) கவலைப்படாமல்  நடந்தே    சென்று   சாதனை செய்திருக்கிறார். மெரிடித் எபர்ஹர்ட்  
என்ற  இவர்  மகன்கள் ப்ளோரிடாவின் டிட்சுவில்லேவில் வசித்துவருகின்றனர். இவரது முதல் நடைப்பயணத்தை ப்ளோரிடாவிலிருந்து க்யூபெக்   நகரத்துக்கு  (7,081  கி.மீ)  தொடங்கினாராம். எத்தனை ஜோடிசெருப்பு மாத்தியிருப்பார்?