ரான்சம்வேரிலிருந்து பாதுகாப்பு!



உலகம் முழுக்க பரவிவரும் ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலை Wannacry என்று குறிப்பிடுகின்றனர். இதிலிருந்து தப்பிக்க வழி என்ன? 

ஹார்ட் டிரைவ் மூலம் தகவல்களை என்கிரிப்ஷன்  செய்து பாதுகாக்கலாம். தொடர்ந்து தகவல்களை அப்டேட்டாக சேமித்தால் மட்டுமே வைரஸ் தாக்குதலை சமாளிக்கலாம். டிராப்பாக்ஸ் போன்ற ஆன்லைன் க்ளவுட் பேக்கப்,  ரான்சம்வேர் தாக்குதலை சமாளிக்குமா என்பது  சந்தேகமே.

எனவே  க்ராஸ்பிளான், கார்போனைட், பேக்பிளாஸே போன்ற க்ளவுட் பேக்கப் சாப்ட்வேர்களை முயற்சிக்கலாம். விண்டோஸ் எக்ஸ்பீயை முடிந்தளவு அப்டேட் செய்து விண்டோஸ் 10  உள்ளிட்ட  ஓஎஸ்களாக  மாற்றுவது  ேட்டா இழப்பை தடுக்கும். கூடுதலாக ஆன்டி வைரஸுக்கு புத்துயிர் அளிக்கலாம்.

ஆண்ட்ராய்டு மலிவுதான். ஆனால் அதன் ஆப்ஸ்‌டோரைவிட  ஆப்பிள்  ஐஸ்டோர்  ஆப்கள் ரொம்பவே சேஃப். அதனால் டேட்டா பாதுகாப் பிற்காக ஆப்பிளை டிக் அடிக்கலாம்.