ரகசிய விமானம் X 347B



அமெரிக்காவின் தானியங்கி விமானமான X37B விண்வெளியில் 2 ஆண்டு ப்ராஜெக்டை நிறைவு செய்துகொண்டு ப்ளோரிடாவிலுள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் தரையிறங்கியுள்ளது. 9 மீட்டர் நீளத்தில்  மினியேச்சர் விண்கலமாக பலரையும் ஆச்சர்யப்படுத்தும் X37B  விமானம், விண்வெளியில் ஏறத்தாழ 700 நாட்களுக்கும் மேலாக சில ரகசியதிட்டங்களை மேற் கொண்டுவிட்டு தற்போது பூமி திரும்பியுள்ளது.

ஆர்பிடல் டெஸ்ட் வெஹிக்கிள் என்று அழைக்கப்படும்  இந்த  விமானம்,  2010  இல்  ஏப்ரல் மாதம்  விண்வெளியில் செலுத்தப்பட்டது. எட்டுமாதங்
களுக்குப்  பிறகு  பூமி  திரும்பிய,  X37B அடுத்து 2011 ஆம் ஆண்டு மார்ச்  மாதம்  விண்ணுக்கு செலுத்தப்பட்டு 15 மாதங்கள் வேலை செய்து, பின் 2012 ஆம் ஆண்டு விண்வெளிக்கு, மீண்டும் செலுத்தப்பட்டு தற்போது 22 மாதங்கள் கழித்து பூமிக்கு திரும்பியுள்ளது.

முதல் மூன்றுமுறை கலிஃபோர்னியாவின் வான்டன்பெர்க் விண்வெளி ஆராய்ச்சிமையத்தில் தரையிறங்கியது. அடுத்த திட்டப் பணிக்காக தயாராகியுள்ள X37B விமானம், இவ்வாண்டு இறுதியில், கென்னடி  விண்வெளி மையத்தின் தெற்கிலுள்ள கேப் கனவரா ராக்கெட் ஏவுதளத்திலிருந்து விரைவில் கிளம்புகிறது.