உலகின் முதல் எலக்ட்ரிக் கப்பல் யாரா!



மனிதர்களே இல்லாமல் இயங்கும் முதல் மின்சாரக்கப்பல் 2018 ஆம் ஆண்டில் கடலில் மிதக்கவிருக்கிறது.  நார்வேயைச் சேர்ந்த யாரா என்ற நிறுவனத்தின் யாரா பிர்க்லேண்ட் மின்கப்பல்தான் தானியங்கியாக கடலில் இறங்கப்போகிறது. 2020 இல் முழுமையாக கடலில் சரக்குகளை சுமந்து வலம் வருவதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

இது டீசல் கப்பல்கள் வெளியிடும் கார்பனின் அளவை 747 டன்களாக குறைக்கும். “எங்கள் புதிய தானியங்கி சரக்கு மின் கப்பல் இயங்கும்போது, கார்பன், நைட்ரஸ் ஆக்ஸைடு மாசுபாடு குறைய வாய்ப்புள்ளது. இவ்வகையில் சரக்கு கப்பல்களில் சுற்றுச்சூழல் காக்கும் புத்துயிர் முயற்சி இது” என தெம்பாய் பேசுகிறார் யாரா கப்பலின் நிறுவனர் ஸ்வெய்ன்டோர் ஹோல்ஸெதர்.