எதிர்கால வாகனம் ஜெட்பேக்!



தினசரி ஃபிளைட்டில் ஏறி, புன்னகையோடு பயணம் செய்து நாடுவிட்டு நாடு செல்வது சரி, ஆனால் அதற்காக எவ்வளவு நேரம் ஏர்போர்ட்டில் காத்துக் கிடப்பது என்பதற்கு பதில் ஜெட்பேக்தான். தண்டர்பால் படத்தில் ஜேம்ஸ்பாண்டும், இப்போது சாஹோ படத்தின் டீஸரில் பிரபாஸும்  முதுகில் மாட்டிக்கொண்டு குதிப்பார்களே அதே வஸ்துதான் ஜெட்பேக். 

மினியேச்சர் ராக்கெட் வடிவிலுள்ள ஜெட்பேக்,  நியூட்டன் 3 ஆம் விதியின் பிராக்டிகல் வடிவம். எரிபொருளோடு திரவ ஆக்சிஜனும் ஒன்று கலந்து ஜெட்பேக்கை மேலே தள்ளுகிறது. தியரி ஈஸி, பிராக்டிகலில் கொஞ்சம் சிக்கலானதுதான். வானில் 30 நொடிகள் மிதக்கவே எக்கச்சக்க எரிபொருள் தேவை. சுமாரான ஜெட்பேக் வாங்கவே 1 லட்சம் டாலர்கள் தேவை. சாகச அனுபவம் தேவை என்பவர்கள் முயற்சிக்கலாம்.