சிரியாவில் வேதிவாயு தாக்குதல்!



சிரியா அரசு, தம் குடிமக்கள் மீதே நடத்திய நச்சுவாயு தாக்குதலில் ஏறத்தாழ 100 க்கும் மேற்பட்டோர் மரணத்தைத் தழுவினர். இதில் 27 குழந்தைகளும் உள்ளடங்குவர். அமெரிக்கா இதற்கு எதிராக 50 ஏவுகணைகளை சிரியா நோக்கி ஏவியுள்ளது. 

*சரின் நிறமற்ற, மணமற்ற சுவையற்ற வாயு. திரவமான இதனை காற்றில் கலக்கும் போது மனிதர்களின் உயிரை காவு  வாங்குகிறது. 1930க்குப் பிறகு இதனைக் கண்டறிந்தவர் ஜெர்மனியின் ஜெரார்ட் ஸ்ட்ரேடர். இவரது குழுவினர் பெயரால் சரின் என்ற பெயர் வந்தது.

*இரண்டாம் உலகப்போரில் டெவலப் செய்யப்பட்ட நச்சுவாயு சரின், மனிதர்களின் ரத்தத்தில் 26 நாட்கள் உறைந்திருக்கும்.

*தோல் மற்றும் காற்றுவழியாக உடலில் நுழையும் சரின் வாயு, 10 நிமிடங்களில் மனிதர்களைக் கொல்லும். கண்வலி, வாயில் எச்சிலும், மூக்கில் சளியும் ஒழுகுதல், குமட்டல், மூச்சிரைத்தல், சிறுநீர் பெருக்கம் ஆகியவை அறிகுறிகள். இதன் மாற்று மருந்துகள் பிராலிடாக்ஸைம், அட்ரோபின்.

2013 ஆம் ஆண்டு சிரியாவின் டமாஸ்கஸில் பயன்படுத்தப்பட்ட சரின் வாயுவால் 1,400 பேர் இறந்தனர். 2014 ஆம் ஆண்டு சிரியா அரசு, வேதி ஆயுத தடுப்பு அமைப்பிடம் (OPCW) ஒப்படைத்த வேதிப்பொருட்களின் அளவு 2 லட்சத்து 20 ஆயிரத்து 462 மெட்ரிக் டன்கள்.