இது கோடீஸ்வரர்களின் கூட்டம்!




ஸ்ரீசந்த் மற்றும் கோபிசந்த் இந்துஜா (இங்கிலாந்து(82 கோடீஸ்வரர்கள்))

1914 ஆம் ஆண்டு லண்டனில் தொடங்கப்பட்ட இந்துஜா நிறுவனத்தின் மூலம் சந்த் மற்றும் கோபிசந்த் சகோதரர்கள் சம்பாதித்த லாபம் 13 பில்லியன் பவுண்டுகள். இக்குழுமம் வாகனங்கள், எரிவாயு, நிதி சார்ந்த சேவைகளை செய்து வருகின்றனர். இந்நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களின் எண்ணிக்கை 72 ஆயிரம்.

லியோனிட் மிகெல்சன் (ரஷ்யா(80 கோடீஸ்வரர்கள்))

மாஸ்கோவைச் சேர்ந்த லியோனிட் சம்பாதிக்கும் கரன்சி அத்தனையும் பெட்ரோல் மற்றும் எரிவாயு நிறுவனமான சிபர் மற்றும் நோவடெக்கில்  கிடைப்பதே. இவரது நிறுவன வருமானம் 14.2 பில்லியன்.

எர்னஸ்டோ பெர்டரெல்லி (ஸ்விட்சர்லாந்து (66 கோடீஸ்வரர்கள்))

செரனோ பார்மசூட்டிகல் நிறுவனத்தை மெர்க் நிறுவனத்திடம் விற்று கோடீஸ்வரரானார். இவரது சொத்து மதிப்பு 11.7 பில்லியன்.

வாங் ஜியான்லின் (சீனா (568 கோடீஸ்வரர்கள்))

சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் ஜாம்பவான் வாங் ஜியான்லின். டிஸ்னி நிறுவனத்திற்கே பீதி கொடுக்கும் டாலியன் வான்டா நிறுவனம் இவருடையதுதான். சொத்து மதிப்பு 31.3 பில்லியன் டாலர்கள்.