கண்களின் சோர்வு நீக்கும் Heated Eye Pad!



எல்சிடி, எல்இடி ஸ்க்ரீன்கள், 70 எம்.எம் திரை டூ மொபைல் திரைகள் வரையிலும் கண்விழித்து வாட்ஸ் அப், ஃபேஸ்புக் பார்த்தால் கண்கள் களைப்படையுமே! அதற்காக மனம் கலங்கி, சமூகக் கடமையை கைவிடமுடியுமா? அதற்குத்தான் இந்த Heated Eye Pad.  

ஏறத்தாழ கண்ணாடி போலவேயிருக்கும் Heated Eye Padஐ எளிதாக அணிந்து கண்சோர்வு போக்கலாம். யுஎஸ்பி சார்ஜ் முறையில் வெப்பம் (அ) குளிர்ச்சி என கூறமுடியாதபடி இதம் கண்களுக்கு கிடைக்கும். மெல்லிசையைக் கேட்டுக்கொண்டு  இதனை அணிந்துகொண்டு அமர்ந்தால் போதும்; மெல்ல கண்களில் படரும் இதமான வெப்பம் வறண்டுபோன கண்களை சீர் செய்து ஓய்வளித்து புத்துயிர் பெறவைக்கிறது.

இப்பேடை  தயாரித்த  ஜானுக்கும் இதே பிரச்னைதான். பலகட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, கண்களுக்கு இதமான அழுத்தம் தேவை என்பது மருத்துவர்களின் கருத்து. இதற்கு ஜான் கண்டுபிடித்ததுதான் Heated Eye Pad. நம்பிக்கை வருகிறதா? இதன் விலை ரூ. 9,575